தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாராஷ்டிரத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி, நால்வர் காயம்!

மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தில் லாரி டிவைடரில் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் நால்வர் காயமடைந்தனர். 

News image

கோப்புப்படம்

Updated On :21 ஆகஸ்ட் 2023, 8:10 am

DIN

மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தில் லாரி டிவைடரில் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் நால்வர் காயமடைந்தனர். 

மும்பை-புணே விரைவுச் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி டிவைடரில் மோதி அங்கிருந்த 5 கார்களின் மீது மோதியது. மாவட்டத்தின் கோபோலி பகுதியில் காலை 9 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இந்த விபத்தில் 5 கார்கள் கண்டெய்னர் லாரிக்கு அடியில் சிக்கியதாகவும், இதில் ஒரு பெண் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் நால்வர் காயமடைந்தனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.