ஐபோன் பயனர்களுக்கு... ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய எச்சரிக்கை!

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் பயனர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. 
ஐபோன் பயனர்களுக்கு... ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய எச்சரிக்கை!

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் பயனர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள அதேநேரத்தில் அதனால் ஏற்படும் பிரச்னைகள், அபாயங்கள் குறித்தும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துவதால் கண் பார்வையில் கோளாறு முதல் மன அழுத்தம் வரை பட்டியலிடப்படுகிறது. மேலும் சார்ஜிங்கில் இருக்கும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் அந்தந்த நிறுவனங்களாலே வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், பயனர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

ஸ்மார்ட்போன்களை கையில் வைத்துக்கொண்டு தூங்குவதையும் குறிப்பாக சார்ஜிங்கில் இருக்கும்போது போனுக்கு அருகில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றுஅறிவுறுத்தியதுடன் இதுகுறித்து பயனர்களுக்கும் தனித்தனியாக குறுஞ்செய்தி வழியாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், 'நன்கு காற்றோட்டம் உள்ள பகுதியில் மற்றும் மேசைகள் போன்ற தட்டையான பரப்புகளில் முறையாக ஐபோன் சார்ஜ் செய்யப்பட வேண்டும். ஏனெனில் ஐபோன் சார்ஜ் செய்யப்படும்போது அதிக வெப்பத்தை உமிழ்கின்றன. இது சரியாக வெளியேறாதபோது தீக்காயங்கள் அல்லது விபத்து ஏற்படலாம்.

எனவே, ஐபோன், சார்ஜர் என எதையும் தலையணைக்கு கீழோ அல்லது அருகிலோ வைப்பது, சார்ஜிங்கில் உள்ள ஃபோனை பயன்படுத்துவது, போனை வைத்துக்கொண்டு தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். சேதமடைந்த கேபிள்கள் அல்லது சார்ஜர்களைப் பயன்படுத்தக் கூடாது, ஈரப்பதம் இருக்கும்போது சார்ஜ் செய்யக்கூடாது' என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com