நிலவில் ஆய்வுப் பணியை தொடங்கியது ரோவர்!

நிலவில் ஆய்வுப் பணியை தொடங்கியது ரோவர்!

விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வுப் பணியை தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வுப் பணியை தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் ஒரு மாத பயணத்துக்கு பிறகு நேற்று மாலை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

தொடர்ந்து, லேண்டருடன் பெங்களூரு இஸ்ரோ கட்டளை மையத்துக்கு தொடர்பு உருவாக்கப்பட்டதை அடுத்து, நிலவின் மேற்பரப்பின் புகைப்படங்களை லேண்டர் பகிர்ந்தது.

இந்நிலையில், லேண்டரில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக வெளியே வந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளது.

அடுத்த 14 நாள்கள் நிலவின் தென் துருவத்தில் உள்ள வெப்பநிலை, மண்ணின் தன்மை, நில அதிர்வுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ரோவர் ஆய்வு செய்யவுள்ளது.

முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் ஆய்வை மேற்கொண்டுள்ள இஸ்ரோ, உலக நாடுகள் அறியாத பல ரகசியங்களை வரும் நாள்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com