‘கேட்’ தேர்வு பிப்ரவரி 3 முதல் தொடங்கும்: ஏஐசிடிஐ அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான `கேட்' தேர்வு பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கும். தேர்வு நடைபெறும் நாட்களில் வேறு எந்தத் தேர்வுகளும் நடைபெறாதவாறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டுக் கொள்ளவும்.
‘கேட்’ தேர்வு பிப்ரவரி 3 முதல் தொடங்கும்: ஏஐசிடிஐ அறிவிப்பு
Updated on
1 min read

2024 ஆம் ஆண்டுக்கான `கேட்' தேர்வு பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கும். தேர்வு நடைபெறும் நாட்களில் வேறு எந்தத் தேர்வுகளும் நடைபெறாதவாறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டுக் கொள்ளுமாறு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஐ) தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் . பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், கட்டடக்கலை பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர், மாணவிகளுக்கு தேசிய அளவில் பொறியியல் பட்டதாரி தேர்வு (கேட்) நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான கேட தேர்வு குறித்த அறிவிப்பை பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) தற்போது gate2024.iisc.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், 2024 இல் நடைபெறவுள்ள கேட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் 30 ஆம் தேதி தொடங்கி செப். 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி 3, 4, 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டை ஜனவரி 3 ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கட்டணமாக பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ 1,800 மற்றும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ 900 செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு நாளும் கணினி வழித் தேர்வாக காலை மற்றும் பிற்காலத்தில் நடத்தப்படுகிறது. கேட் 2024 தேர்வில் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய புதிய பாடப்பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தேர்வானது 3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வை ஐஐஎஸ்சி, 7 ஐஐடி-க்களுடன் இணைந்து நடத்துகிறது.

தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டு, அதே மாதம் 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மதிப்பெண் அட்டைகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வர்கள் பெற்ற கேட் தேர்வு மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

இந்த நிலையில், கேட் தேர்வு நடைபெறும் நாட்களில், வேறு எந்த தேர்வுகளும் நடைபெறாதபடி தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்றும் ஏஐசிடிஐ அறிவுறுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com