காணாமல் போன 5,000 சிறார்களை எட்டு மாதத்தில் மீட்ட காவல்துறை

புன்னகை திட்டத்தின் மூலம், காணாமல் போன 5000 சிறார்களை இந்த ஆண்டில் ஆகஸ்ட் வரை மும்பை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
காணாமல் போன 5,000 சிறார்களை எட்டு மாதத்தில் மீட்ட காவல்துறை


மும்பை: புன்னகை திட்டத்தின் மூலம், காணாமல் போன 5000 சிறார்களை இந்த ஆண்டில் ஆகஸ்ட் வரை மும்பை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறார்களைக் காட்டிலும் இது மிக அதிகம் என்று கூறப்படுகிறது.

உள் விவகாரத் துறை அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது புன்னகை திட்டம். காணாமல் போன குழந்தைகளை மீட்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.

அனைத்துக் காவல்நிலையங்களின் ஒத்துழைப்போடு, ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, குழந்தைகளைத் தேடும் பணி நடந்தது. 

படிப்பில் கவனம் இல்லை, எப்போதும் கைப்பேசியை பயன்படுத்துகிறார் என திட்டும் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு, சினிமாவில் நடிக்க ஆசையோடு, காதல் ஆசையால் என ஏராளமான சிறார்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். சிலர் கடத்தப்படுகிறார்கள். 

இதுபோன்ற சிறார்களை கண்டுபிடிக்க தொழில்நுட்ப உதவியோடு காவல்துறையினர் களமிறங்கி, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 5000 சிறார்களை மும்பை காவல்துறையினர் மீட்டு பெற்றோரிடம் சேர்த்துள்ளனர்.

பல பகுதிகளில் பணியாள்ளும் காவல்துறையினரைக் கொண்ட வாட்ஸ்ஆப் குழுக்களில் காணாமல் போன சிறார்களின் புகைப்படம் மற்றும் விவரங்களைப் பகிர்வது, ரயில் நிலையங்களில் தன்னார்வலர்களைக் கொண்ட குழுக்களை பணியமர்த்துவது, காணாமல் போன சிறார்கள் சமூக தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்களா என்று சோதிப்பது, அவர்கள் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆராய்வது என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டு இதுவரை 5,000 பேரை கண்டுபிடித்துள்ளனர்.

பெண் காவலர்கள், சாதாரண உடையில் கோயில்களுக்குச் சென்று அங்கு வரும் சிறார்களை கண்காணிப்பது போன்றவற்றிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

காணாமல் போன சிறார்களை கண்டுபிடிப்பதோடு, அவர்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com