ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மணிப்பூரில் நான்கு பயங்கரவாதிகள் கைது!

மணிப்பூரில் வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image
Updated On :29 ஆகஸ்ட் 2023, 6:35 am

DIN

மணிப்பூரில் வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

போலீஸார் குழுக்கள், ராணுவம் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில்
இம்பால் கிழக்கு மற்றும் விஷ்ணுபூர் மாவட்டங்களில் நான்கு பயங்கரவாதிகளை கைது செய்தனர். 

இந்த நடவடிக்கையின்போது அவர்களிடம் இருந்த ஆறு துப்பாக்கிகள், ஐந்து தோட்டாக்கள் மற்றும் இரண்டு வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளனர். 

ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தேசிய நெடுஞ்சாலை 37 (இம்பால்-சில்சார் சாலை) வழியாக வாகனங்களின் இயக்கம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும், முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 

மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மொத்தம் 129 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, விதிமீறல்களுக்காக இதுவரை 2,027 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.