விண்ணில் பாயும் ஆதித்யா எல்-1: நேரில் காண வழிமுறைகள்!

ஆதித்யா எல்-1 விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆதித்யா எல்-1 விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் வரும் சனிக்கிழமை (செப். 2) விண்ணில் செலுத்தப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தில் இருந்து அன்றைய தினம் காலை 11.50 மணிக்கு ராக்கெட்டை செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

சூரிய ஆய்வுக்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 சுமாா் 400 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து சுமாா் 15 லட்சம் கிலோ மீட்டா் தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் அந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.

அந்தப் பகுதியில்தான் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான ஈா்ப்பு விசை நிலையாக இருக்கும். அதனால் அங்கு இருந்தபடி சூரியனின் வெளிப்புற பகுதியின் வெப்பச் சூழல், கதிா்வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை ஆதித்யா எல்-1 மேற்கொள்ள உள்ளது.

வழிமுறைகள்:

1. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வத் தளமான https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.

2. ஆதார் கார்டு அல்லது அரசு அங்கீகரித்த இதர அடையாள அட்டை மற்றும் செல்போன் எண்ணை தயாராக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

3. இணையத்தில் Register பக்கத்தில் தேவையான தரவுகளை பதிவிட்டு அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். ஒரு அனுமதிச்சீட்டில் 2 பேர் வரை பதிவு செய்துகொள்ளலாம்.

முன்பதிவு செய்வதற்கு இன்று (ஆக.29) நண்பகல் 12 மணிக்கு மேல் தொடங்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல்-1 விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள லான்ச் வியூ கேலரியில் இருந்து நேரடியாக காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com