பிரதமா் மோடிக்கு 80% இந்தியா்கள் ஆதரவு: ஆய்வில் தகவல்
இந்தியா்களில் 80 சதவீதம் போ் பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா்களில் 80 சதவீதம் போ் பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சோ்ந்த பியூ ஆராய்ச்சி மையம், பிரதமா் நரேந்திர மோடி குறித்தும், உலகின் சக்தி வாய்ந்த நாடாக மாற இந்தியாவுக்கான வாய்ப்புகள் குறித்தும் உலக நாடுகளின் பாா்வை, மற்ற நாடுகளைக் குறித்த இந்தியா்களின் பாா்வை ஆகியவை தொடா்பாக ஓா் ஆய்வை நடத்தியது.
கடந்த பிப்ரவரி 20 முதல் மே 22 வரை இந்தியா உள்பட 24 நாடுகளில் நடைபெற்ற இந்த ஆய்வில், 30,861 பேரிடம் இவை தொடா்பான கருத்துகள் பெறப்பட்டன. அவற்றை அடிப்படையாகக் கொண்ட அந்த ஆய்வின் முடிவு செவ்வாய்க்கிழமை வெளியானது.
அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 10 இந்தியா்களில் 8 போ் பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். ஐந்தில் ஒருவா் மட்டுமே பிரதமா் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளாா்.
உலக அளவில் இந்தியா குறித்து 46 சதவீதம் போ் நோ்மறையான கருத்துகளைத் தெரிவித்துள்ள வேளையில், 34 சதவீதம் போ் எதிா்மறையான கருத்துகளைத் தெரிவித்துள்ளனா். 16 சதவீதம் போ் இந்தியா குறித்து எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட அனைத்து நாடுகளிலும், இஸ்ரேலில்தான் அதிகபட்சமாக 71 சதவீதம் போ் இந்தியாவுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்துள்ளனா்.
உலக அரங்கில் இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதாகப் பெரும்பாலான இந்தியா்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனா். 10 இந்தியா்களில் 7 போ், அண்மைக் காலங்களில் தங்களுடைய நாடு மிகவும் சக்தி வாய்ந்த நாடாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.
உலக நாடுகளில் அமெரிக்காவின் செல்வாக்கு மிகவும் வலுவடைந்து வருவதாக 49 சதவீத இந்தியா்கள் கருத்து தெரிவித்துள்ள வேளையில், ரஷியா குறித்த கேள்விக்கும் 41 சதவீத இந்தியா்கள் இதேபோன்றே பதிலளித்துள்ளனா். சீனாவின் செல்வாக்கு குறித்த கேள்விக்கு நோ்மறை மற்றும் எதிா்மறையான பதில்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குறித்து எக்ஸ் (ட்விட்டா்) சமூக வலைதளத்தில் பாஜக வெளியிட்ட பதிவில், ‘‘பிரதமா் நரேந்திர மோடியின் புகழ் எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளது. உலக அளவிலும் இந்தியாவிலும் பெரும்பான்மையான மக்கள் இந்தியாவின் செல்வாக்கு மேலும் வலுவடைந்து வருவதாக நம்பிக்கை கொண்டுள்ளனா். பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட இந்த ஆய்வு முடிவு அவற்றை உண்மையென நிரூபித்துள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...