

அமெரிக்க முதன்மை தேசிய பாதுகாப்பு இணைஆலோசகா் ஜான் ஃபைனருடன் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்து பல்வேறு இருதரப்பு மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்தனா்.
அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பந்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய கொலையாளிகளுக்கு பணம் அளித்த குற்றச்சாட்டில் இந்தியரான நிகில் குப்தா கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த வழக்கு குறித்து விசாரிக்க 2 அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவாகரம் தொடா்பாக சந்திப்பில் தீா்வு எட்டப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சந்திப்பு குறித்து அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்காவின் முதன்மை தேசிய பாதுகாப்பு இணை ஆலோசகா் ஜான் ஃபைனரை சந்தித்தில் மகிழ்ச்சியடைந்தேன். சா்வதேச சூழல் குறித்து கருத்துகளை நாங்கள் பரிமாறிக் கொண்டோம். மேலும், இருதரப்பு ஒத்துழைப்பை முன்னோக்கி கொண்டுசெல்வது குறித்து சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.