மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தெலங்கானா வந்தார் மல்லிகார்ஜுன கார்கே!

ரேவந்த்  ரெட்டியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஹைதராபாத் வந்தடைந்தார். 

News image
தெலங்கானா முதல்வர் பதவியேற்பு விழாவில்...
Updated On :7 டிசம்பர் 2023, 11:48 am

DIN

ரேவந்த்  ரெட்டியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஹைதராபாத் வந்தடைந்தார். 

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட ரேவந்த் ரெட்டி, அந்த மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று(வியாழக்கிழமை) பதவியேற்க உள்ளாா். தலைநகா் ஹைதராபாதில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

இதில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஹைதராபாத் வந்தடைந்தார். அவருக்கு தெலங்கானா காங்கிரஸ் தரப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். 

முன்னதாக, தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோரை ரேவந்த் ரெட்டி புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.