ஜார்க்கண்டில் இடைவிடாது மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
ஜார்க்கண்டில் இடைவிடாமல் பெய்துவரும் மழையால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.


ஜார்க்கண்டில் இடைவிடாமல் பெய்துவரும் மழையால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
புதன்கிழமை ராஞ்சியில் அதிகபட்சமாக 18.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 6.8 புள்ளிகள் குறைவாகும்.
ஜாம்ஷெட்பூர் மற்றும் டால்டன்கஞ்ச் அதிகபட்சமாக 23.2 மற்றும் 20.6 டிகிரி செல்சியஸ் பதிவானது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இதே வெப்பநிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: கேஜிஎஃப் - 3 கதை தயார்!
டிச.8 முதல் வானிலை படிப்படியாக சீராகலாம் என ராஞ்சி வானிலை ஆய்வு மையத்தின் பொறுப்பாளர் அபிஷேக் ஆனந்த் தெரிவித்தார்.
மேலும், இன்று மாலை முதல் மழையின் தீவிரம் குறையும். மாநிலத் தலைநகர் ராஞ்சியில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...