ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

விபத்தில் பலியான 5 பேரில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 5-வது நபர் அவர்களின் நண்பர்.

News image
மாதிரி படம் | ENS
Updated On :8 டிசம்பர் 2023, 9:23 am

DIN

கர்நாடக மாநிலம், அரசு பேருந்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட காரில் பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து சிர்ஸி தாலுகா, உத்தர கர்நாடக மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

விபத்து நிகழ்ந்த அதே இடத்தில் 4 பேரும் பலியாகியுள்ளனர். மற்றுமொருவர் காயங்களோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மங்களூருவில் இருந்து அவர்கள் வந்ததாகவும் அரசு பேருந்து ஹூப்ளியில் இருந்து பாட்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

இரு வாகனங்களில் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது. கார் மோசமாக சேதமடைந்துள்ள நிலையில் பேருந்தின் கண்ணாடி உடைந்துள்ளது. பேருந்தில் இருந்த பயணிகளுக்கு சிறியளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கைக் காவலர்கள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.