சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காசி தமிழ்ச் சங்கமம் 2: டிச.17ல் வாராணசி செல்கிறார் பிரதமர் மோடி!

காசி தமிழ்ச் சங்கமம் 2-ஆம் கட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க டிசம்பர் 17, 18ல் பிரதமர் மோடி வாராணசிக்குச் செல்லவிருக்கிறார். 

News image
Updated On :8 டிசம்பர் 2023, 10:47 am

DIN

காசி தமிழ்ச் சங்கமம் 2-ஆம் கட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க டிசம்பர் 17, 18ல் பிரதமர் மோடி வாராணசிக்குச் செல்லவிருக்கிறார். 

பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாராணசிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார். இவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கக் காசி பகுதி பாஜக பிரிவு ஆயத்தமாகியுள்ளது. காசியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்வார் என பாஜக தலைவர் திலீப் சிங் படேல் கூறியுள்ளார். 

மோடி தனது பயணத்தின் முதல் நாளில், கட்டிங் மெமோரியல் இன்டர் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை கண்காட்சியைப் பார்வையிடுகிறார். 

அதன்பிறகு, டிசம்பர் 17-ல் தொடங்கும் காசி தமிழ்ச் சங்கமம் 2-ஆம் கட்டத்தின் ஒரு பகுதியாக கலாசார நிகழ்ச்சி நடைபெற உள்ள நமோ காட் பகுதிக்குச் செல்கிறார். 

டிசம்பர் 18-ல் வாராணசியில் உள்ள ஸ்வர்வேட் கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பிறகு தனது நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். 

பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் இறுதி செய்யப்பட்டு வருகிறது. இது வாராணசியில் உள்ள சேவாபுரி பகுதியில் நடைபெற வாய்ப்புள்ளது. பிரதமர் மோடிக்கு காசி பகுதி பாஜக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும் என்று படேல் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.