தேர்தல் தோல்வி: தில்லியில் காங்கிரஸ் ஆய்வுக் கூட்டம்!

ராஜஸ்தான் மற்றும் மிஸோரம் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி குறித்த ஆய்வுக் கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது. 
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஆய்வுக் கூட்டம்
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஆய்வுக் கூட்டம்

ராஜஸ்தான் மற்றும் மிஸோரம் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி குறித்த ஆய்வுக் கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது. 

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கட்சி, பாஜகவிடம் பறிகொடுத்தது. மிஸோரம், மத்திய பிரதேசத்திலும் தோல்வியைத் தழுவிய நிலையில், ஆறுதலாக தெலங்கானாவில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. 

இந்நிலையில் ராஜஸ்தான் மற்றும் மிஸோரம் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று(சனிக்கிழமை) ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. 

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் தற்காலிக முதல்வருமான அசோக் கெலாட் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் தோல்விக்கான காரணங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. 

முன்னதாக நேற்று சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களில் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com