தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பா.ஜ.க.விற்கு வாக்களித்த உறவினருக்கு அடி உதை!

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால் தன்னை உறவினர் ஒருவர் அடித்துத் துன்புறுத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 

News image

கோப்புப்படம்.

Updated On :9 டிசம்பர் 2023, 11:29 am

மத்திய பிரதேசம் பார்கேடா ஹாசன் கிராமத்தில் பா.ஜ.க.விற்கு வாக்களித்ததற்காக தன்னை உறவினர் ஒருவர் அடித்துத் துன்புறுத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

பா.ஜ.விற்கு வாக்களித்ததால் தனது மைத்துனரால் கடந்த டிசம்பர் 4-ஆம் நாள் கடுமையாக தாக்கப்பட்டதாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். பா.ஜ.க.விற்கு வாக்களித்தது தெரியவும் முதலில் திட்டியவர், பின் மூங்கில் கம்பால் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து தாக்கியுள்ளார். பின் அலறல் சத்தம் கேட்டு வந்த அண்டை வீட்டாரால் காப்பாற்றப்பட்டதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். 

மேலும், 'இனி எங்களது பேச்சைக் கேட்காவிட்டால் கொன்றுவிடுவோம்' என அவரம் அவரது மனைவியும் மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைதுசெய்யப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.