மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு எதிராக பாஜக போராட்டம்!

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் பிரசாத் சாஹுவுக்கு எதிராக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அக்கட்சியின் எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News image
நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு எதிராக பாஜக போராட்டம்
Updated On :11 டிசம்பர் 2023, 5:32 am

DIN

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் பிரசாத் சாஹுவுக்கு எதிராக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அக்கட்சியின் எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேற்கு ஓடிஸாவின் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான பல்தேவ் சாஹு குழுமத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அந்த நிறுவனம், நிறுவனத்துக்கு தொடர்புடைய நபர்களின் பிற அலுவலகங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு வாரமாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வரை ரூ. 300 கோடி எண்ணப்பட்டுள்ளது.

பல்தேவ் சாஹு குழுமத்துக்கும் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் பிரசாத் சாஹுவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் தீரஜ் பிரசாத்துக்கு எதிராக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் பாஜக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸுக்கு எதிராக பாதாகைகளை ஏந்தி கோஷமிட்டு பேரணியாக சென்றதால் நாடாளுமன்ற வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.