ஞானவாபி மசூதி வழக்கில் தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் அளித்து வாராணசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானவாபி மசூதி தொடர்பான அறிவியல்பூர்வ ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வாராணசி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தொல்லியல் துறை ஒருவாரம் அவகாசம் கோரியதைத் தொடர்ந்து இந்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணையை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதையும் படிக்க | பாஜக எப்போதுமே வாக்குறுதிகளை நிறைவேற்றாது: மம்தா பானர்ஜி தாக்கு!
முன்னதாக ஆய்வறிக்கையை நவம்பர் 17-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் தொல்லியல் துறை கூடுதல் அவகாசம் கேட்டதால் நவம்பர் 28-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது.
அதன்பின் மீண்டும் பதினைந்து நாட்கள் அவகாசம் கோரியது தொல்லியல் துறை. பத்து நாட்கள் அவகாசம் அளித்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நவ.30-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கூடுதல் அவகாசம் வழங்கி, விசாரணை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியானது, முகலாய அரசா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில் ஹிந்து கோயிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டதாக சில ஹிந்து அமைப்புகள் தரப்பில் கூறப்படுகிறது.
அதையடுத்து மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்துமாறு ஜூலை 21-ஆம் தேதி இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஜூலை 24-ஆம் தேதி இந்திய தொல்லியல் துறை தனது ஆய்வை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க கூரியா் நிறுவனங்களுடன் எஸ்.பி. ஆலோசனை

போராட்டங்களில் கலந்துகொண்ட மாணவா்களுக்கான சட்ட உதவி எண்ணை தொடங்கிய இளைஞா் காங்கிரஸ்

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயனுக்கு நிபந்தனை பிணை

பள்ளி, கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை: குறைதீா் கூட்டத்தில் மனு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



