அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காதல் விவகாரத்தில் தங்கையை சுட்டுக் கொன்ற அண்ணன்!

உத்தரப் பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் தங்கையை அண்ணன் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :11 டிசம்பர் 2023, 9:26 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் தங்கையை அண்ணன் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஷேக்புரா காதீம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. முஸ்கான் (17). இவர் அதே கிராமத்தில் உள்ள மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் தொடர்ந்து எஸ்எம்எஸ் அனுப்பி வந்துள்ளார்.

முஸ்கானின் சகோதரர் ஆதித்யா எஸ்எம்எஸ் அனுப்புவதை நிறுத்துமாறு கண்டித்துள்ளார். இதனை முஸ்கான் பொருட்படுத்தாமல், எஸ்எம்எஸ் அனுப்புவதைத் தொடர்ந்துள்ளார். இதனால் கோபமடைந்த ஆதித்யா மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தங்கையை சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார். 

சம்பவம் நடைபெற்றபோது முஸ்கானின் தாய் பப்பிதா மற்றொரு அறையில் இருந்துள்ளார். சத்தம் கேட்டு வெளியே வந்த தாய் மற்றும் அண்டை வீட்டினர் முஸ்கானை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் முஸ்கான் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர். 

சுட்டுக் கொன்று தலைமறைவான ஆதித்யாவை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த வழக்கை அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.