மும்பையின் பரபரப்பான லோக்மான்யா திலக் ரயில் நிலையத்தில் திடீரென தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ரயில்கள் நிலையத்துக்குள் வருவதிலும் புறப்படுவதிலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
‘ஜன் ஆஹார்’ உணவு தயாரிக்கும் இடத்தில் இந்த விபத்து பிற்பகல் 2.45 மணியளவில் நிகழ்ந்ததாகவும் அருகில் உள்ள முதல் நடைமேடையில் பயணிகள் யாரும் அப்போது இல்லையெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் இடத்திற்கு மேல்தளத்தில் அமைந்துள்ள உணவு விடுதியில் தீ விபத்து நிகழ்ந்ததும், முன்பதிவு செய்யும் இடத்திலிருந்தும் அறிவிப்பு தரும் இடத்திலிருந்தும் பணியாளர்கள் விரைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விபத்தால் ஏற்பட்ட தீ, பிற்பகல் 3.30 மணிக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: புதிய நாடாளுமன்ற கட்டடம் பாதுகாப்பானதாக இல்லை: சசி தரூர் பேட்டி
இந்த விபத்து நிகழும் போது எடுக்கப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

2,020 நாய்களுக்குத் தடுப்பூசி: புதுகை மாநகராட்சிக் கூட்டத்தில் தகவல்
487 கிலோ குட்கா பறிமுதல்: கா்நாடக இளைஞா்கள் 2 போ் கைது

புதுகையில் 5 ஆண்டு சாதனைகள் விளக்க மலா் வெளியீடு

பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

