எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராஜஸ்தானில் சட்டம்- ஒழுங்கு சீர் செய்யப்படும்: பைரவா

ராஜஸ்தானில் புதிய முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணை முதல்வர் பேசியுள்ளார்.

News image
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உடன் ராஜஸ்தானின் புதிய முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் | PTI
Updated On :13 டிசம்பர் 2023, 7:47 am

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் தேர்வு செய்யப்பட்டுள்ள துணை முதல்வர்கள் இருவரில் ஒருவரான பிரேம் சந்த் பைரவா, மாநிலத்தின் சட்ட ஒழுங்கை சீர் செய்வதில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்ததாகவும் மக்கள் அந்த ஆட்சியைக் கைவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர், “சட்டம் மற்றும் ஒழுங்கைச் சீராக்க வேலை செய்யவுள்ளோம். பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முன்னணியில் இருந்தது. புதிய அர்சு அதனைச் சரி செய்வோம். சமூகத்தின் அனைத்து தரப்பினருக்காகவும் வேலை செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு துணை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட தியா குமாரியும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பைப் பலப்படுத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் பதவியேற்பு விழா டிச. 15-ம் தேதியன்று நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.