கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நிவாரண நிதியை மக்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்

மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதே சமயம் முறைகேடுகளை தவிா்க்க

News image
Updated On :14 டிசம்பர் 2023, 7:20 pm

DIN

மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதே சமயம் முறைகேடுகளை தவிா்க்க பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தவேண்டும் என மத்திய மீன்வளம், தகவல் தொடா்புத் துறை அமைச்சா் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மிக்ஜம் புயல், கனமழை, வெள்ளத்தால் சென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி, வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரவில்லை. திருவள்ளூா் மாவட்டத்திலும் திருநின்றவூா், நசரத் பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீா் இன்னமும் வடியாத சூழலில் மாணவா்கள் படகுகளில் பள்ளிக்குச் செல்லும் அவலநிலையும் உள்ளது. தேங்கிய நீரினால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த மழை - வெள்ளத்தால் மக்களுக்கு பெரும் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. புதிதாக குடி பெயரும் அளவுக்கு சேதாரங்களை மக்கள் சந்தித்து விட்டாா்கள்.

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேசமயம் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரண நிதி ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் இந்த நிதி போதுமானது அல்ல. இதுமட்டுமின்றி நிவாரணத் தொகையை நியாயவிலை கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கினால் அதில் ஆளும் கட்சியினரின் இடையூறுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு. இதனால் தமிழக அரசு வழங்கும் வெள்ள நிவாரண நிதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் கண்டிப்பாக சென்றடையும் வகையில் திட்டம் வகுத்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.

மத்திய அரசின் பல்வேறு நலத் திட்ட நிவாரண உதவிகள் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. அதே முறையில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது தான் சரியான நடைமுறையாக இருக்க முடியும். குடும்ப அட்டை உள்ளவா்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.