தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாடாளுமன்ற புகைவீச்சுக்கு காரணம் இதுதான்!: ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் நடந்த வண்ணப்புகை வீச்சு சம்பவத்திற்கு வேலையில்லாத் திண்டாம்தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

News image

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

Updated On :16 டிசம்பர் 2023, 11:04 am

DIN

நாடாளுமன்றத்தில் நடந்த வண்ணப்புகை வீச்சு சம்பவத்திற்கு விலைவாசி உயர்வும், வேலையில்லாத் திண்டாமும்தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

தில்லியில் தேர்தல் ஆயத்தப் பணிகள் தொடர்பான கூட்டத்தை முடித்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, 'நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் அத்துமீறியதற்கு மோடியின் கொள்கைகள்தான் காரணம்' எனத் தெரிவித்துள்ளார். 

பிரதமரின் செயல்படாத கொள்கைகளால் விலைவாசிகள் உயர்ந்துள்ளது, இளைஞர்கள் வேலையில்லாமல் அல்லல் படுகிறார்கள். அதானாலேயே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் கூறினார். நாட்டின் மிகப்பெரிய பிரச்னை வேலையில்லாத் திண்டாட்டம்தான் எனக் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தின் மக்கவையில் பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்த சாகர் மற்றும் மனோரஞ்சன் ஆகியோர் வண்ணப் புகைக் குப்பிகளை வீசிய சம்பவம் நாட்டையே அதிர்ச்சியாக்கியுள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.

அதே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியே அமோல் ஷின்டே மற்றும் நீலம் தேவி ஆகியோர் வண்ணப்புகைக் குப்பிகளை வீசியதோடு, 'சர்வாதிகாரம் வேலை செய்யாது' எனக் கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.