மக்களவையிலிருந்து மேலும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம்!

மக்களவையில் பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்ட மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
மக்களவையிலிருந்து மேலும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம்!

மக்களவையில் பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்ட மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

காங்கிரஸை சேர்நத் டி.கே.சுரேஷ், நகுல்நாத், தீபக் பைஜ் ஆகியோர் அவையை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் மக்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. 

முன்னதாக நேற்று(புதன் கிழமை) 2 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்த நிலையில், இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மூவர் இடைநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

மக்களவையில், ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த எதிா்க்கட்சிகளின் மொத்த பலம் 138 ஆகும். இதுவரை 100 போ் இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட 38 போ்தான் எஞ்சியுள்ளனர்.

திமுகவின் 24 எம்.பி.க்களில் 16 பேரும் திரிணமூல் காங்கிரஸின் 22 எம்.பி.க்களில் 13 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒரே நாளில் 45 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com