கோவை டபுள் டக்கர் பேருந்துக்கு முன்பதிவு செய்வது எப்படி?

கோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கா் பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தனா்.
டபுள் டக்கா் பேருந்து சேவை தொடங்கியது
டபுள் டக்கா் பேருந்து சேவை தொடங்கியது

கோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கா் பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தனா்.

கோவையின் முக்கிய பகுதிகளை இந்த பேருந்தில் பயணித்தவாறு 30 நிமிடங்கள் பயணிகள் பார்வையிடலாம். இதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. முன்பதிவு மட்டுமே அவசியம்.

எவ்வாறு முன்பதிவு செய்வது?
கோவை திருவிழா என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. அல்லது நேரடியாக https:bit.ly/doubletakkar.com என்ற இணையதளம் அல்லது பிரத்யேக மொபைல் செயலி மூலம் பேருந்தில் பயணிக்க முன்பதிவு செய்யலாம்.

பேருந்து புறப்படும் இடம் மற்றும் இறங்குமிடங்களை அறிந்து கொண்டு, உங்களுக்கு ஏற்ற நேரத்தில் பேருந்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 8 வரை மட்டுமே இந்த சேவை இருக்கும் என்பதால், உங்கள் பயணத்துக்கு இப்போதே முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

கோவை மாவட்டத்தை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டில் ஜனவரி 2 முதல் 8-ஆம் தேதி வரை கோவை விழா கொண்டாடப்படவுள்ளது.

விழாவில், மாரத்தான், தெரு ஓவியம், இசை மழை, பசுமை கோவை, கலாசார நிகழ்ச்சிகள், ஒலி, ஒளி நிகழ்ச்சி, சைக்ளத்தான் சிறப்பு ஒலிம்பிக் உள்ளிட்ட 15 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

விழாவின் ஒரு பகுதியாக கோவை நகரத்தின் முக்கிய பகுதிகளை பொதுமக்கள் சுற்றிப் பாா்க்கும் வகையில் டபுள் டக்கா் பேருந்து சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டபுள் டக்கா் பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தனா்.

டிசம்பா் 24 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரை கோவை மாநகரில் 2 டபுள் டக்கா் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பேருந்திலும் 36 இருக்கைகள் உள்ளன. இப்பேருந்தில் பயணம் மேற்கொள்ள எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. https:bit.ly/doubletakkar.com என்ற இணையதளம் அல்லது பிரத்யேக மொபைல் செயலி மூலம் பேருந்து பயணத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். 
இந்தப் பேருந்துகள் கோவை மாநகரில் முதல் இரண்டு நாள்களுக்கு வ.உ.சி மைதானத்தில் தொடங்கி பல்வேறு இடங்களில் இருந்து நகரின் மற்ற இடங்களுக்குச் செல்கின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com