ஜி20 செயற்கைக்கோளுக்கான கருவிகள் வழங்க இந்தியா கோரிக்கை: எஸ்.சோமநாத்

இந்தியாவால் முன்மொழியப்பட்ட ஜி20 செயற்கைக்கோளுக்கான ஏவுகணைகள் உள்ளிட்ட பிற கருவிகளை வழங்கி உறுப்பு நாடுகள் பங்களிக்க வேண்டும்
ஜி20 செயற்கைக்கோளுக்கான கருவிகள் வழங்க இந்தியா கோரிக்கை: எஸ்.சோமநாத்
Updated on
1 min read

இந்தியாவால் முன்மொழியப்பட்ட ஜி20 செயற்கைக்கோளுக்கான ஏவுகணைகள் உள்ளிட்ட பிற கருவிகளை வழங்கி உறுப்பு நாடுகள் பங்களிக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை வைத்தது. இந்நிலையில் அச்செயற்கைக்கோள் இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஐஐடி மும்பையில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டுவிழாவில் இஸ்ரோ தலைவா் சோமநாத் பங்கேற்று பேசியதாவது:

தற்காலத்தில் வானிலை மற்றும் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்களை காற்று மாசு, கடல் அலை, மண்ணின் ஈரப்பதம், பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் உள்ளிட்டவைகளைக் கொண்டு அளவிடுவதற்கான பணிகளை இந்தியா மேற்கொள்ளவுள்ளது.

இதற்காக செப்டம்பரில் இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலையைக் கண்காணிப்பதற்கான ‘ஜி20 செயற்கைக்கோளை’ வடிவமைக்க இந்தியா முன்மொழிந்தது. இதற்குத் தேவையான ஏவுகணைகள், கருவிகள் உள்ளிட்டவற்றை வழங்கி பங்களிக்குமாறு உறுப்பு நாடுகளிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. இச்செயற்கைக்கோள் இன்னும் 2 ஆண்டுகளில் தயாா் செய்யப்படும். அது உலக நன்மைக்காக இந்தியா வழங்கும் மிகச்சிறந்த பங்களிப்பாக இருக்கப் போகிறது.

அச்செயற்கைக்கோள் மூலம் பெறப்படும் தரவுகளைக் கொண்டு உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்களுக்கான வானிலை கொள்கைகளை வகுக்கலாம்;அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். உலகிற்கான செயற்கைக்கோளை வடிவமைக்க ஒவ்வொரு அறிவியல் சமூகத்தையும நாங்கள் வரவேற்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com