தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மகாராஷ்டிரம்: கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலியாகினர். 

News image
Updated On :31 டிசம்பர் 2023, 5:36 am

DIN

மகாராஷ்டிரத்தில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலியாகினர். 

மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பத்தில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தீ விபத்திற்கான காரணம் இன்றும் கண்டறியப்படவில்லை. தீவிபத்தின் போது 10-15 தொழிலாளர்கள் கட்டிடத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்ததாக தொழிலாளர்களில் ஒருவர் கூறினார். தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது, "அதிகாலை 2:15 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. 

நாங்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, ​​தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. ஆறு பேர் உள்ளே சிக்கியிருப்பதாக உள்ளூர்வாசிகள் எங்களுக்குத் தெரிவித்தனர். எங்கள் அதிகாரிகள் உள்ளே நுழைந்து ஆறு பேரின் உடல்களை மீட்டனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.