நாகாலாந்து தேர்தல்: 20 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர் அறிவிப்பு

நாகாலாந்து மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

நாகாலாந்து மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. 

60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 27ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிடுகிறது. 

மாநில தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக மத்திய தேர்தல் குழு ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இன்று நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. 

60 தொகுதிகளுடைய நாகாலாந்து சட்டப்பேரவையில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. அதனால், 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இதில், மாநில தலைவராக தெம்ஜென் இம்னா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அலோங்டாகி தொகுதியில் களமிறங்குகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com