அதானி குழுமப் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவின் வங்கித் துறை எந்த ஒரு தடுமாற்றமுமின்றி சீராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய வங்கிகள் எந்த ஒரு ஆபத்துமின்றி சீராக செயல்படுவதாகவும், மத்திய வங்கி, வங்கிகளிடமிருந்து கடன் பெற்றவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய வங்கிகளின் முதலீடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரிசர்வ் வங்கி இவ்வாறு பதிலளித்துள்ளது.
இதையும் படிக்க: ’விஜய் 67’ படத்தின் பெயர் அறிவிப்பு...
இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் கூறியதாவது: மத்திய வங்கி வங்கித் துறையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வங்கிகளின் நிதி நிலைக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. வங்கிகளிடம் இருந்து கடன் பெற்றவர்களை மத்திய வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஒரு கண்காணிப்பாளராகவும், வங்கிகளை ஒழுங்குப்படுத்தும் அமைப்பு என்கிற முறையிலும் இந்திய வங்கிகளையும், அதன் செயல்பாடுகளையும் ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானியின் குழுமப் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கி இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








