
மேற்கு வங்கத்தில் ஞாயிறன்று இரண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உரையாற்றுகிறார்.
மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு பஞ்சாயத்து தேர்தல் மற்றும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இவ்விரு தேர்தல்களிலும் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என பாஜக தற்போதே தயாராகி வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஞாயிறன்று இரண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உரையாற்றுகிறார்.
இதற்காக நட்டா சனிக்கிழமை மாலை கொல்கத்தா வந்து கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்த உள்ளார். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை, நட்டா கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கண்டிக்கு வருகை தருகிறார். அங்கு அவர் தனது முதல் பேரணியை நடத்துகிறார். அதன் பிறகு இரண்டாவது பேரணியாக கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கத்வாவுக்கு அவர் செல்கிறார்.
இரண்டு பேரணிகளுக்குப் பிறகு, பாஜக தலைவர் ஞாயிற்றுக்கிழமை மாலை கொல்கத்தாவுக்கு திரும்பி பின்னர் அங்கிருந்து தில்லி திரும்புகிறார். ஆனால், நட்டா வருகைக்கு திரிணமூல் கட்சி அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நட்டாவின் சொந்த மாநிலமான ஹிமாசல பிரதேசத்தில் பாஜக தோல்வியடைந்தது. அவரது மேற்கு வங்கப் பயணங்கள் திரிணமூலுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது" என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.