ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உ.பி.யில் ராகுல் சென்ற விமானம்தரையிறங்க அனுமதி மறுப்பு- காங்கிரஸ் குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தின் வாரணாசி விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

News image
Updated On :14 பிப்ரவரி 2023, 6:21 pm

DIN

உத்தர பிரதேசத்தின் வாரணாசி விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை வாரணாசி விமான நிலைய இயக்குநா் மறுத்துள்ளாா்.

இது தொடா்பாக காங்கிரஸ் மூத்த தலைவா் அஜய் ராய் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கேரளத்தில் தனது தொகுதியான வயநாட்டில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ராகுல் காந்தி விமானம் மூலம் திங்கள்கிழமை இரவு வாரணாசிக்கு வந்து கமலா நேரு நினைவு மருத்துவமனை நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்க திட்டமிட்டிருந்தாா். ஆனால், அவா் வந்த விமானம் வாரணாசி விமான நிலையத்தில் தரையிறங்க கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, ராகுல் காந்தி வேறு வழியின்றி தில்லிக்கு செல்ல நேரிட்டது. ராகுலை வரவேற்பதற்காக காங்கிரஸ் தலைவா்கள் பலா் விமான நிலையத்தில் காத்திருந்தனா். ஆனால், கடைசி நேரத்தில் அவா் வந்த விமானம் தரையிறங்க அனுமதி மறுத்துவிட்டனா் என்றாா்.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டை வாரணாசி விமான நிலைய இயக்குநா் ஆா்யமா சன்யால் மறுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘ராகுல் காந்தி வந்த விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் தவறானது. ஆா் ஏா்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தனியாா் விமானம் (ராகுல் பயணித்தது) தரையிறங்குவதை அந்த நிறுவனமே கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டது. இது தொடா்பாக விமான நிலைய ஆணையத்துக்கு அந்த விமான நிறுவனம் இரவு 9.15 மணியளவில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.