பசுமை எரிசக்தி துறையில் நிலையான வளர்ச்சிக்கு அரசு உறுதி பூண்டுள்ளது: பிரதமர்
பசுமை எரிசக்தித் துறையில் நிலையான வளர்ச்சிக்கு அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


பசுமை எரிசக்தித் துறையில் நிலையான வளர்ச்சிக்கு அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
எப்ஏஎம்-ll திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் 22.9 கோடி லிட்டர் எரிபொருளைச் சேமித்து, 33.9 கோடி கிலோகிராம் கார்பன்டை ஆக்ஸைடைக் குறைத்துள்ளன என்று மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேயின் சுட்டுரை பதிவிற்கு மோடி பதிலளித்துள்ளார்.
பசுமை எரிசக்தி துறையில் நிலையான வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் கூறினார்.
வியாழனன்று 2023-24 மத்திய பட்ஜெட்டில் பசுமை வளர்ச்சி குறித்து வெபினார் மூலம் தொடங்கி பல்வேறு அறிவிப்புகள் குறித்து பங்குதாரர்களிடம் மோடி உரையாற்றுகிறார்.
பசுமை வளர்ச்சியின் வெபினார் ஆறு பிரேக்அவுட் அமர்வுகளைக் கொண்டிருக்கும், இது பசுமை வளர்ச்சியின் ஆற்றல் மற்றும் ஆற்றல் அல்லாத கூறுகளை உள்ளடக்கியது.
நாட்டின் பசுமையான தொழில்துறை மற்றும் பொருளாதார மாற்றம், சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயம் மற்றும் நிலையான எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுவருவதற்கான 2023-24 யூனியன் பட்ஜெட்டின் ஏழு முக்கிய முன்னுரிமைகளில் பசுமை வளர்ச்சியும் ஒன்றாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...