ஷிவமோகா: கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் கட்டப்பட்ட புதிய விமான நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்ட நிலையில், பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவின் 80வது பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது.
ஷிவமோகா விமான நிலையத்தைத் திறந்து வைத்துப்பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கூட்டத்தில் திரண்டிருந்த மக்களைப் பார்த்து, எடியூரப்பாவுக்கு 80வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கையிலிருக்கும் செல்லிடப்பேசிகளின் டார்ச் விளக்குகளை ஒளிரவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையும் படிக்க..இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக ஓய்வூதியம்: கேள்வி - பதில்கள்
இதையடுத்து, அங்கே திரண்டிருந்த மக்களும் தங்களது செல்லிடப்பேசியில் விளக்குகளை ஒளிரவிட்டு, எடியூரப்பாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, இன்று மேலும் ஒரு காரணத்தால் இந்த நாள் சிறந்த நாளாக உள்ளது. கர்நாடகத்தின் முக்கிய தலைவராக எடியூரப்பாவின் பிறந்தநாள். அவர் நீடூழ வாழ நான் பிரார்த்திக்கிறேன். ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காகவே அவர் தன்னுழைய வாழ்வை அர்ப்பணித்துள்ளார். கடந்த வாரம் கர்நாடக சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய உரை, பலருக்கும் ஊக்கத்தை அளிக்கும் என்று கூறியிருந்தார்.
மிகப்பெரிய உயரத்துக்குச் சென்ற பிறகும் ஒரு பணிவு இருக்கும் அவரிடம். பொதுவாழ்வில் இருக்கும் அனைவருக்கும் எடியூரப்பாவின் வாழ்வும் அவரது பேச்சும் ஊக்கத்தை அளிக்கும் என்ற கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டத்தின் முன் அனைவரும் சமம்: போக்சோ வழக்கில் மத்திய அமைச்சர் மகன் கைது!

11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளைப் பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!
டிராக்டா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
கஞ்சா வைத்திருத்த சிறுவன் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

