கடும் பனி: பஞ்சாபில் பள்ளிகளுக்கான விடுமுறை ஜன. 8 வரை நீட்டிப்பு
பஞ்சாபில் அரசுப் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை ஜனவரி 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


பஞ்சாபில் அரசுப் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை ஜனவரி 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதையடுத்து முதலில் பள்ளி நேரம் மாற்றப்பட்ட நிலையில் பின்னர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று(ஜன. 2) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 8 ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் ஜனவரி 9 ஆம் தேதி திறக்கப்படுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் பெயின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் நாளை ஆலோசனை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...