நடிகை துனிஷா ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்பட்டாரா? ஆதாரம் வெளியிட்ட ஷீசன் குடும்பம்

நடிகை துனிஷா சர்மா ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஷீசன் குடும்பத்தினர் ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளனர். 
நடிகை துனிஷா / ஷீசன் குடும்பத்தினர்
நடிகை துனிஷா / ஷீசன் குடும்பத்தினர்

நடிகை துனிஷா சர்மா ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஷீசன் குடும்பத்தினர் ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளனர். 

ஷீசன் வீட்டில் நடிகை துனிஷா இருக்கும் புகைப்படங்களை ஆதாரங்களாக வெளியிட்ட ஷீசன் குடும்பத்தினர், துனிஷா எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர் என்றும் அவரை எந்தவிதத்திலும் நாங்கள் கட்டாயப்படுத்தியதில்லை எனவும் விளக்கமளித்துள்ளனர். 

சண்டிகரைச் சேர்ந்த துனிஷா சர்மா, ஹிந்தி தொடர்களில் நடித்து வந்தார். ‘பாரத் கா வீா் புத்ரா’, ‘மஹாராணா பிரதாப்’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடா்களிலும் ‘ஃபிதூா்’, ‘பாா் பாா் தேக்கோ’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடிகை துனிஷா சா்மா நடித்துள்ளாா். 

அந்தவகையில் ‘அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்’ என்ற தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு மும்பையின் வசாய் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்புக்கு மத்தியில் கழிவறையில் டிசம்பர் 24ஆம் தேதி துனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

துனிஷாவின் தாயார், தந்து மகளின் மறைவுக்கு காதலனும் சக நடிகருமான ஷீசன் காரணம் என காவல் துறையில் புகாரளித்ததைத் தொடர்ந்து டிசம்பர் 25ஆம் தேதி சக நடிகர் ஷீசன் கான் கைது செய்யப்பட்டார். 

அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகை துனிஷாவை ஹிஜாப் அணிய ஷீசன் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதாகவும், அவளை நன்கு பயன்படுத்திக்கொண்டு பின்னர் விலக்கிவிட்டதாகவும் துனிஷாவின் தாயார் குற்றம் சாட்டினார். 

மேலும், படப்பிடிப்பின்போது ஒருமுறை பலர் மத்தியில் நடிகர் ஷீசன், துனிஷாவை கன்னத்தில் அறைந்ததாகவும் குற்றம் சாட்டினார். 

இதனிடையே துனிஷாவின் தாயாரின் குற்றச்சாட்டுக்கு ஷீசன் குடும்பத்தினர் விளக்கம் அளித்தனர். இது தொடர்பாக ஷீசனின் தாயார் மற்றும் சகோதரிகள் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

ஷீசன் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு துனிஷாவின் தாயார் வனிதா சர்மா ஆதாரம் அளிக்க வேண்டும். படப்பிடிப்பின்போது துனிஷாவின் கன்னத்தில் ஷீசன் அறைந்தது குறித்து துனிஷா எதுவும் தெரிவிக்கவில்லை. துனிஷாவும் ஷீசனை திரும்ப அடிக்கவில்லை. 

துனிஷா எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர். அவர் பல நாள்கள் எங்கள் வீட்டில் அவரின் தாயுடன் வந்து தங்கியுள்ளார். அந்த நாள்கள் துனிஷாவுக்கு மகிழ்ச்சிகரமான நாள்களாக இருந்துள்ளது. துனிஷாவை அவரின் தாயார் எப்படி அழைப்பார் என்பது பலருக்குத் தெரியும். நாங்கள் துனிஷாவை எதற்காகவும் கட்டாயப்படுத்தியதில்லை.  அவர் விரும்பியதையே செய்ய அனுமதித்தோம். 

துனிஷாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணமும். ஆனால், அதற்காக ஷீசன் மீது துனிஷாவின் தாயார் பொய்யாக குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல. துனிஷாவின் பிறந்தநாளான ஜனவரி 4ஆம் தேதி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்திருந்தோம். அவரின் தாயாருக்கும் நாங்கள் அவரை நடத்திய விதம் தெரியும். ஆனால், ஒருபோதும் துனிஷாவை நாங்கள் கட்டாயப்படுத்தியதில்லை. துனிஷா எங்கள் குடும்பத்தில் ஒருவர் எனக் குறிப்பிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com