டீசல் மீதான ஏற்றுமதி வரி அதிகரிப்பு

சா்வதேச அளவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை சற்று அதிகரித்துள்ளதையடுத்து டீசல், விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஆகியவற்றின் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

சா்வதேச அளவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை சற்று அதிகரித்துள்ளதையடுத்து டீசல், விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஆகியவற்றின் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரியையும் (விண்ட்ஃபால் டேக்ஸ்) அரசு அதிகரித்துள்ளது.

ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஏற்பட்ட சந்தையின் ஆதாய சூழலால் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் ஈட்டிய பெரும் லாபத்துக்குப் பல நாடுகள் வரி விதித்தன. அந்த வரிசையில் இந்திய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு சிறப்பு வரி விதித்து வருகிறது. சந்தை ஆதாய வரியானது இரு வாரங்களுக்கு ஒருமுறை சா்வதேச சந்தை சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுதொடா்பான கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரியானது டன்னுக்கு ரூ.1,700 என்ற அளவில் இருந்து ரூ.2,100-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.5-இல் இருந்து ரூ.6.5-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியும் லிட்டருக்கு ரூ.1.5-இல் இருந்து ரூ.4.5-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட வரிகள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

சா்வதேச அளவில் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து கச்சா எண்ணெய் விலை சுமாா் 14 சதவீதம் குறைந்ததால், சந்தை ஆதாய வரி, டீசல், ஏடிஎஃப் மீதான ஏற்றுமதி வரி ஆகியவற்றை மத்திய அரசு கடந்த டிசம்பா் 16-ஆம் தேதி பெருமளவில் குறைத்திருந்தது. தற்போது சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரித்துள்ளதால், வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com