இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: நிதின் கட்கரியிடம் எ.வ. வேலு வலியுறுத்தல்

தமிழகத்தில் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது

News image
Updated On :4 ஜனவரி 2023, 9:44 pm

 நமது நிருபர்

தமிழகத்தில் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று மாநில பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு
 தெரிவித்தார்.
 தமிழகத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்பாக தில்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை புதன்கிழமை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக அமைச்சர் எ.வ. வேலு அளித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பல்வேறு நிலைகளில் காலதாமதமாக நடைபெற்று வருகிறது என்பதை தமிழக முதல்வர் ஆய்வுக் கூட்டத்தில் கூறியிருந்தார். இதனடிப்படையில், இந்த நிலுவைப் பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பல்வேறு திட்டப் பணிகள் தொடர்பாக தனித்தனி மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் முக்கியமாக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையில் உயர்நிலை சாலை அமைக்கும் பணி நிலுவையில் உள்ளது.
 மேலும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றாலும், செங்கல்பட்டிலிருந்து திண்டிவனம் வரை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும். இதுபோன்று பல்வேறு கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
 திருச்சிக்கு அருகே துவாக்குடி உயர்நிலை மேம்பாலச் சாலை, ஸ்ரீபெரும்புதூரிலிருந்து பூந்தமல்லி மற்றும் மாதவரம் முதல் சென்னை வெளிவட்டச் சாலை வரை உயர்நிலை மேம்பாலச் சாலைகள் அமைக்க வேண்டியது குறித்தும் ஏற்கெனவே கடிதங்கள் அளிக்கப்பட்டிருந்தன. அந்தப் பணிகளையும் உடனடியாக தொடங்க வேண்டுமென வலியுறுத்தியுறுத்தப்பட்டது.
 மேலும், பல்வேறு சுங்கச்சாவடிகளை அகற்றுவது குறித்தும் மத்திய அமைச்சரிடம் பேசப்பட்டது. குறிப்பாக, விருதுநகர் மாவட்டம் கப்பலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் நகரப் பகுதியில் அமைந்துள்ளன. இங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கிருஷணகிரி நகரத்தில் வசிக்கும் மக்கள் அருகேயுள்ள மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள், அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு அந்த சுங்கசாவடியை கடந்துதான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இது குறித்தும் அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தோம். அதற்கான மாற்று வழியை உடனடியாக அமைக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.
 மேலும், நெடுஞ்சாலைகளில் ஒப்பந்தம் முடிவுற்று கட்டமைப்பிற்கு செலவான தொகை வசூலாகியுள்ளது. இந்த நிலையில், அத்தகைய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளின் கட்டணங்கள் 40 சதவீதம் குறைக்கப்படும் என்று மாநிலங்களவையில் அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்திருந்திருந்தார். இது குறித்தும் மத்திய அமைச்சரிடம் கேட்டோம்.
 இந்தக் கட்டண வசூல் முறையையும் நாங்கள் மாற்றி அமைப்போம் என்று அவர் தெரிவித்தார். சேலம், உளுந்தூர்பேட்டை சாலை, பல இடங்களில் 4 வழிச் சாலையாகவும், சில இடங்களில் 2 வழிச் சாலையாகவும் உள்ளது. இதனால் 8 இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட வேண்டும். மேலும், பழுதடைந்த இந்தச் சாலையையும், கள்ளக்குறிச்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையும் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். இந்த விவகாரத்தில் வேறொரு ஒப்பந்ததாரரை நியமித்து அந்தப் பணிகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கட்கரி தெரிவித்தார்.
 இதுபோன்று தமிழகத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த அமைச்சரைக் கேட்டுக் கொண்டோம். தமிழக முதல்வர் கூறிய கருத்துகளையும் அவரிடம் தெரிவித்தோம். இது குறித்து நிகழாண்டிலேயே முயற்சி செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.
 சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. இந்த திட்டத்திற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த விஷயத்தில் தோழமைக் கட்சிகளுடன் கலந்து பேசி முதல்வர் விரைவில் கொள்கை முடிவு எடுப்பார் என்றார் அமைச்சர் எ.வ. வேலு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.