
ஹைதராபாத்தில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஹைதராபாத்தில் உள்ள கேபிஹெச்பி காலனி அருகே சனிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டதாகவும், இயந்திரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கேபிஹெச்பி காவல் ஆய்வாளர் பி கிஷன் குமார் கூறுகையில், "இந்திரக் கோளாறுதான் தீ விபத்துக்குக் காரணம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். தீ விபத்து ஏற்பட்டபோது பேருந்தில் சுமார் 5 பயணிகள், 2 ஓட்டுநர்கள் மற்றும் ஒரு உதவி ஓட்டுநர் இருந்தனர்.
இதையும் படிக்க- ஈரோட்டில் காங்கேயம் காளை கண்காட்சி
ஓட்டுநரும் மற்றொரு நபரும் ஓட்டுநரின் கேபினில் தீப்பற்றியதை முதலில் கவனித்தனர். இதைத்தொடர்ந்து பேருந்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.