டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தேர்வெழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 90 ஒதுக்கிய அரசு!

தேர்வுக்குத் தேவையானவற்றை நகல் எடுத்துக்கொள்ள 8 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அம்மாநில அரசு ரூ.72 முதல் 90 ரூபாய் ஒதுக்கியுள்ளது. 

News image
Updated On :11 ஜனவரி 2023, 11:17 am

DIN

பஞ்சாபில் 8 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள், தங்களுக்குத் தேவையான புத்தகங்களை (முக்கிய கேள்விகள் அடங்கிய தொகுப்பு) வாங்கிக்கொள்ள ஒவ்வொரு மாணவருக்கும் அம்மாநில அரசு ரூ. 72 முதல் 90 வரை வழங்குகிறது. 

அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் மொத்தம் ரூ.3.5 கோடி ரூபாயை பஞ்சாப் அரசு ஒதுக்கியுள்ளது.

பஞ்சாபில் மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து தேர்வு எழுதவுள்ள மாணவர்களை கோனார் உரைகளை வாங்கிப் படிக்க வைக்கும் நோக்கத்தில் பஞ்சாப் அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 

அதன்படி, தேர்வுக்குத் தேவையானவற்றை நகல் எடுத்துக்கொள்ள 8 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அம்மாநில அரசு ரூ.72 முதல் 90 ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதற்காக மொத்தம் ரூ. 3.5 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 

இது குறித்து பேசிய மாவட்ட கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், மாணவர்கள் சிறப்பாக தேர்வெழுத வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு சார்பில் மாணவர்களுக்கு இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.72, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.90 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.