மாசடையும் யமுனை: தில்லி பேரவைக்கு வெளியே பாஜகவினர் போராட்டம்!

யமுனை நதியின் மாசுப்பாட்டை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் தில்லி சட்டப்பேரவைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாசடையும் யமுனை: தில்லி பேரவைக்கு வெளியே பாஜகவினர் போராட்டம்!

யமுனை நதியின் மாசுப்பாட்டை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் தில்லி சட்டப்பேரவைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ராம்வீர் சிங் பிதுரி கூறுகையில், 

அதிகமாக மாசுபட்ட யமுனை நீர் நிரப்பப்பட்ட பாட்டில்களை எடுத்துச் சென்ற பாஜக தலைவர்கள், இந்த விவகாரத்தைப் பற்றி பேரவைக்குள் குரல் எழுப்புவோம் என்றார்கள்.

யமுனை நதியின் அசுத்தமான நீரை விநியோகிப்பது மக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக அவர் கூறினார். 

அசுத்தமான நீரால் சிறுநீரகம், கல்லீரலை சேதப்படுத்துவதோடு, புற்று நோயும் மற்றும் பிற நோய்களுக்கும் வழிவகுக்கிறது. 

யமுனையைச் சுத்தம் செய்ய ஆத் ஆத்மி அரசுக்கு ரூ.2,500 கோடி ரூபாயை மோடி அரசு வழங்கியுள்ளது. 

கடந்த எட்டு ஆண்டுக் கால ஆம் ஆத்மி ஆட்சியில் யமுனை 200 சதவீதம், அதாவது இருமடங்காக மாசுபட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய பணம் எங்கே போனது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடம் கேட்க விரும்புகிறோம். 

இந்த விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் குரல் எழுப்பப்படும் என்றும், அதுகுறித்து விவாதிக்கப்படாவிட்டால் மேலும் போராட்டம் நடத்தப்படும் என்றும் பிதுரி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com