ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஒடிசாவில் குழாய் மூலம் குடிநீர் திட்டத்தை பார்வையிட்டார் உதயநிதி

சுய உதவிக் குழுவினர் ஒத்துழைப்புடன்  அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பணிகளை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.

News image
ஒடிசாவில் குழாய் மூலம் குடிநீர் திட்டத்தை பார்வையிட்டார் உதயநிதி
Updated On :21 ஜனவரி 2023, 11:45 am

DIN

புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடிசை மாற்றுப் பகுதியில் "குழாய் மூலம் குடிநீர்" திட்டத்தில் அப்பகுதி இளம், சுய உதவிக் குழுவினர் ஒத்துழைப்புடன்  அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பணிகளை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் அருகேயுள்ள ‌இஷநேஸ்வர் பிஜுஆதார்ஷ் காலனியில் "ஜகா மிஷன் திட்டத்தில்" அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பணிகளை பார்வையிட்டார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் 16-நாடுகள் பங்கேற்கின்ற 15-வது ஆண்கள் ஹாக்கி போட்டிகள் 2023-ஜனவரி 13 முதல் 29-வரை நடைபெறுகிறது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒடிசா மாநிலத்தில், நடைபெற்று வருகின்ற இந்த உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளை காணவும், அம்மாநிலத்தில் உள்ள விளையாட்டு கட்டமைப்புகளை பார்வையிடவும்,  மூன்று நாள் சுற்றுப்பயணமாக  புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா சென்றார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் ஹாக்கி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தும், விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளையும் பார்வையிட்டார்.

மேலும் மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்பட்டு வருகின்ற " மிஷன் சக்தி  திட்டம்"- குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  

தொடர்ந்து புவனேஸ்வர் நகரின் அருகில் உள்ள இஷநேஸ்வர் பிஜு ஆதர்ஷ் காலனி கிராமத்தில் குடிசை மாற்றுப் பகுதியில் "குழாய் மூலம் குடிநீர்" திட்டத்தில் அப்பகுதி இளம், சுய உதவிக் குழுவினர் ஒத்துழைப்புடன்  அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பணிகளை  பார்வையிட்டு பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அப்பகுதியில் உள்ள சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடிய போது  "சமுதாய வளர்ச்சி என்பது மகளிர் கையில் மட்டுமே உள்ளது" எனத் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.