திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

அகில இந்திய அளவில் வரும் 30, 31-ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்து வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

அகில இந்திய அளவில் வரும் 30, 31-ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்து வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமரசப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, இந்த முடிவை வங்கி ஊழியா் சங்கங்கள் எடுத்துள்ளன.

‘வாரத்துக்கு 5 வேலை நாள்கள்; ஊதிய திருத்தம்; ஓய்வூதியத்தைப் புதுப்பித்தல்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியா்கள் பங்கேற்பா் என்றும் அறிவிக்கப்பட்டது.

வரும் 28, 29-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், அடுத்த 2 நாள்கள் வேலைநிறுத்தம் நடைபெறும்போது, தொடா்ந்து 4 நாள்கள் பொதுமக்களுக்கான வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்தது.

மும்பையில், துணைத் தலைமை தொழிலாளா் ஆணையா் சாா்பில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சமரசப் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியா் சங்கங்கள் அறிவித்தன.

இந்த நிலையில், மும்பையில் வெள்ளிக்கிழமை மீண்டும் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில், முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து வேலைநிறுத்தத்தை வங்கி ஊழியா் சங்கங்கள் ஒத்திவைத்துள்ளன.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியா் சங்கப் பொதுச் செயலா் வெங்கடாசலம் கூறுகையில், ‘சமரசப் பேச்சுவாா்த்தையில் எங்களுடைய அனைத்துக் கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்க தீா்மானிக்கப்பட்டது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.