ரூ.8 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கும்பல்

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மேர் அருகே, ஏடிஎம் கருவியை உடைக்க முடியாததால், ரூ.8 லட்சம் பணத்துடன் இயந்திரத்தையே திருட்டுக் கும்பல் தூக்கிச் சென்றுள்ளது.
உலகின் மிக உயரமான ஏடிஎம் எந்த நாட்டில் உள்ளது? 
உலகின் மிக உயரமான ஏடிஎம் எந்த நாட்டில் உள்ளது? 


அஜ்மெர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மேர் அருகே, ஏடிஎம் கருவியை உடைக்க முடியாததால், ரூ.8 லட்சம் பணத்துடன் இயந்திரத்தையே திருட்டுக் கும்பல் தூக்கிச் சென்றுள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருடர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சுர்சுரா பகுதியில் உள்ள பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தைக் கொள்ளையடித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏடிஎம் அருகே இருக்கும் சிசிடிவி கேமராவில், ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

நேற்று நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காலையில்தான் இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com