இதுகுறித்து சூரத் கிராமப்புற துணைக் காவல் கண்காணிப்பாளர் இலேஷ் படேல் கூறுகையில், இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார் மோதிய வேகத்தில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து காருக்குள் சிக்கிக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கார் வேகமாக சென்றுள்ளது. இதனை பார்த்தோர் செல்போனில் விடியோ எடுத்துக்கொண்டே காரை விரட்டிச் சென்றுள்ளனர். அதனை பார்த்தவர் காரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். முதலில் மும்பை, பின்னர் ராஜஸ்தான் என தலைமறைவாக இருந்துள்ளார். கடைசியாக அவரது செல்போன் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் வியாழக்கிழமை காம்ரேஜ் சுங்கச்சாவடியில் நுழையும் போது அவரை கைது செய்தனர்.