இணையவழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி

இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயங்கள், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு பந்தய தொகையில் 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
நிர்மலா சீதாராமன் (கோப்புப் படம்)
நிர்மலா சீதாராமன் (கோப்புப் படம்)

இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயங்கள், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு பந்தய தொகையில் 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் மாநில நிதியமைச்சா்கள், மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயங்கள், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு அதிகபட்ச ஜிஎஸ்டி விகிதமான 28 சதவீதத்தை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த விளையாட்டுகளில் ஈடுபடுவோரின் பந்தய தொகையில் 28 சதவீதமானது ஜிஎஸ்டியாக வசூலிக்கப்படும். இணையவழி விளையாட்டுகளில் திறன் சாா்ந்தவை, வாய்ப்பு சாா்ந்தவை என்ற வேறுபாடு முற்றிலுமாகக் களையப்படுகிறது.

இணையவழி விளையாட்டுகளை ஜிஎஸ்டி சட்ட வரம்புக்குள் கொண்டுவருவதற்கான சட்டத் திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும். இணையவழி விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடா்பாகக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய தகவல்-தொழில்நுட்ப அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுத்துள்ளது.

இணையவழி விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது, அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவு. இந்த விவகாரத்தில், இணையவழி விளையாட்டுகளை வழங்கி வரும் நிறுவனங்களைக் குறிவைக்கும் வகையில் செயல்படவில்லை. கோவா, சிக்கிம் மாநில சுற்றுலாத் துறையில் கேசினோ முக்கியப் பங்கு வகித்து வருகிறது. அந்த மாநிலங்களின் கருத்தையும் கேட்டபிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுமாா் 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என மத்திய நிதித்துறைச் செயலா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com