அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 18 பேர் கண்பார்வை இழப்பு: நடந்தது என்ன?

ராஜஸ்தானின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு 18 பேர் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): ராஜஸ்தானின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு 18 பேர் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மாதம் ராஜஸ்தான் அரசாங்கத்தின் சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின் கீழ் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர்களில் பெரும்பாலோனோர் தங்களது ஒரு கண்ணின் பார்வை இழந்ததாகக் கூறப்படுகிறது. சிலர் தங்களுக்கு கண்களில் கடுமையான வலி இருப்பதாகத் தெரிவித்ததை அடுத்து, மருத்துவமனை அதிகாரிகள் அவர்களை மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்த சிலருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்த பிறகும் அவர்களால் இழந்த பார்வையை மீண்டும் பெற முடியவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். 

இதுகுறித்து நோயாளி ஒருவர் கூறுகையில், "எனக்கு ஜூன் 23 ஆம் தேதி கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஜூலை 5 ஆம் தேதி வரை எனக்கு கண் பார்வை இருந்தது. ஆனால் ஜூலை 6-7 தேதி கண்பார்வை போய்விட்டது, அதன் பிறகு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆனால் பார்வையை மீண்டும் பெற முடியவில்லை" என குற்றம்சாட்டினர். 

இது குறித்து பார்வை பாதிக்கப்பட்டுள்ள நோயாளி சாந்தா தேவி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 
கண்பார்வை இழப்புக்கு தொற்று நோய் தான் காரணம் என மருத்துவர்கள் கூறியதாகவும், நோய்த்தொற்றை குணப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மெதுவாகச் சரியாகிடும் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை என நோயாளி தெரிவித்தார். 

இதுகுறித்து மருத்துவமனையின் கண் மருத்துவப் பிரிவு அதிகாரிகள் தங்கள் தரப்பில் எந்த குறையும் இல்லை என்று கூறியதுடன், நோயாளிகளிடமிருந்து புகார்களைப் பெற்ற பிறகு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

ராஜஸ்தானின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு 18 பேர் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com