இது குறித்து அவர் பேசியதாவது: மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தை தாமதமாக தொடங்கிய போதிலும், சந்திரயான் திட்டங்கள் மூலம் நிலவு குறித்து இந்தியா கண்டறிந்த தகவல்களை நமக்கு முன்னால் விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தை தொடங்கிய நாடுகள் கண்டுபிடிக்கவில்லை. சந்திராயன் திட்டத்தின் ஆராய்ச்சிகளை சந்திரான் - 3 மேலும் விரிவுபடுத்தப் போகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் நிலவின் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த சந்திராயன் - 3 திட்டம் பல்வேறு விதமான பலன்களை இந்தியாவுக்கு அளிக்கப் போகிறது. சந்திராயன் - 3 திட்டம் இந்தியாவை விண்வெளித் துறையில் உலக அளவில் முன்னணி நாடாக மாற்றியுள்ளது என்றார்.