மணிப்பூர் கலவரம்: மாநிலங்களவையில் குறுகிய நேரம் விவாதம்!
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் குறுகிய நேரம் விவாதிக்க மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தான்கர் அனுமதி வழங்கினார்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால், அவையில் அமளி ஏற்பட்டது.
ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு அவையில் இருந்த நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்தார். மோடியை தரக்குறைவாக பேசிய எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரினார். நிர்மலா சீதாராமனுக்கு பதிலளித்து எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டனர்.
அதனைத் தொடர்ந்து பேசியதிமுக எம்பி திருச்சி சிவா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது ஒலிப்பெருக்கி அணைக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.
அவையில் பேசும்போது எனது ஒலிப்பெருக்கி அணைக்கப்பட்டது திட்டமிட்டு எனக்கு செய்த அவமானம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.