நியூ டெஹ்ரி: ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் பயணித்த எஸ்யூவி கார் ஒன்றின் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர் மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
உத்தரகண்ட், தேவ்பிரயாக் காவல் நிலையத்திற்குட்பட்ட தீன் தாரா அருகே கார் ஓட்டுநர் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டது என்று தெஹ்ரி மூத்த காவல் கண்காணிப்பாளர் நவ்நீத் புல்லர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த ஆறு பேரும் தேவபிரயாகிலுள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 26 வயதான கார் ஓட்டுநர் சோகன் சிங் பண்டிர் மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் சிகிச்சையின் போது இறந்தனர். மேலும் நான்கு பயணிகள் சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லாரி மற்றும் சேதமடைந்த காரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நவ்நீத் புல்லர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

உசிலம்பட்டி: மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



