
அரபிக்கடலில் உருவாகியிருக்கும் அதிதீவிர புயலாயன பிபர்ஜாய் காரணமாக குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிபா்ஜாய் புயல் குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 15) மாலை கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மத்திய அரபிக்கடலில் கடந்த 6-ஆம் தேதி உருவான இந்தப் புயல், குஜராத்தின் மாண்டவி நகருக்கும் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் இடைப்பட்ட பகுதியில் வரும் 15-ஆம் தேதி நண்பகலில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது குஜராத் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு, காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 150 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
ராஜ்கோட்டில் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்ட ரிலே கோபுரம் இடிக்கப்பட்டுள்ளது. அதி தீவிர புயலான பிபர்ஜாய் தீவிரமடைந்துள்ளதால் 12 என்.டி.ஆர்.எஃப் குழுவினர் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். துவாரகா மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்டவர்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
கடற்கரையோரப் பகுதிகளில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிக பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்பு படையினா் தயாா் நிலையில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். மேலும், ராணுவம், கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுடன் மாவட்ட நிர்வாகங்கள் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.