ஜம்மு-காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
ஜம்மு-காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைப் பகுதிக்கு அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததாக வந்த தகவலையடுத்து பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வெள்ளிக்கிழமை காலை பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் வெளிநாட்டு பயங்கரவாதிகள் என்று காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்தார். 

தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com